தூத்துக்குடி : தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘இன்டெர்நேஷனல் யூனியன் யோகா கூட்டமைப்பு மற்றும் சைன் யோகா பவர் அமைப்பு” சார்பாக மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு. இன்டெர்நேஷனல் யூனியன் யோகா கூட்டமைப்பு மற்றும் சைன் யோகா பவர் அமைப்பு சார்பாக (16.10.2022), தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினருக்கு மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இந்த யோகா போட்டியில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.
இதில் பொதுப்பிரிவினருக்கான யோகா போட்டியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை முதல் நிலை காவலர் திரு. ராஜலிங்கம், என்பவர் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். மேற்படி மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற முதல் நிலை காவலர் திரு. ராஜலிங்கம் அவர்களை (17.10.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.