தென்காசி: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் திருமதி.சைலா அவர்களின் 9ம் வகுப்பு படிக்கும் மகன் முகில்வர்ஷன் என்பவர் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் சிறுவனை பாராட்டும் விதமாக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்கள் முகில் வர்ஷனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி மேலும் பல பதக்கங்களை வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்..