திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த வெல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(62), என்பவர் வீட்டில் கடந்த 28ஆம் தேதி 6.5 பவுன் தங்க நகை கொள்ளை போனது தொடர்பாக கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி மேற்பார்வையில் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ், சிதம்பரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், தேனியை சேர்ந்த அஜித்பாண்டியன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி