கோவை : கே கே புதூர் பகுதியைச் சேர்ந்த குணாளன் என்பவரின் மகன் நரேந்திரன் (46).கிராண்ட் பிளாசா ஓட்டல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் புரூக் பீல்டு வணிக வளாகம் பகுதிக்கு காரில் சென்றார். அப்போது காருக்குள் வைத்திருந்த பேக்கில் இருந்த 7 கிராம் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றார்.இதுகுறித்து ஆர்.எஸ்புரம் போலீசில் நரேந்திரன் புகார் அளித்தார்.இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர். விசாரணையில் நகையை திருடியது பல்லடம் வதம்பச்சேரியை சேர்ந்த நாராயணன் (49) என தெரியவந்தது. இதையடுத்து நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்