இராமநாதபுரம்: கடந்த (08.08.2025)-ம் தேதி அபிராமம் கோனோியேந்தல் கிராமத்தைசேர்ந்த முனியசாமி என்பவரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 14 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற வித்யா என்பவரை கைது செய்த அபிராமம் காவல்துறையினர், அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர். தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை விரைவாக கைது செய்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G. சந்தீஷ். IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.