சிவகங்கை: மானாமதுரை, ஆதனூர் மதகு அணையில் பர்மா காலனியை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் செந்தமிழ்ச்செல்வன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆற்றுநீரில் சிக்கிக்கொண்டார்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் உதவியுடன் காவலர் திரு .சரவணன் மற்றும் திரு.முனீஸ்வரன் ஆற்றில் சிக்கிய சிறுவனை பத்திரமாக மீட்டனர். அப்பகுதி மக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி