பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் 38. என்பவர் பெரம்பலூர் நகரிலுள்ள அட்டிகா கோல்டு கம்பெனியின் கிளைக்கு 16.02.2022 ம் தேதி மாலை 17.00 மணிக்கு சென்று 8 கிராம் எடையுள்ள 23 தங்க காசுகளை விற்பனை செய்வதாக கூறி உதவி மேலாளர் விஜயசாந்தி இடம் கொடுத்து ரூபாய் 8 லட்சத்து 30 ஆயிரம் பெற்றுள்ளார்.
மேலும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக மூன்று காசுகளை வரதராஜன் இரண்டாக வெட்டி எடுத்துவந்து கொடுத்ததை நம்பி சரியாக சோதனை செய்யாமல் 23 காசுகளையும் பெற்றுக்கொண்டு அதற்குண்டான பணத்தை கொடுத்துள்ளார்.
மேற்படி 23 தங்கக் காசுகளையும் பெங்களூரு பிரதான கம்பெனிக்கு அனுப்பி அங்கு பரிசோதித்த போது தங்க முலாம் பூசப்பட்ட போலியான காசுகள் என்று தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் பெரம்பலூர் அட்டிகா கோல்டு கம்பெனியின் பொறுப்பு மேனேஜர் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரதராஜனை அழைத்து விசாரித்ததில் மேற்படி பாலமுருகன் 30 என்பவரின் ஆலோசனையின் பேரில் தங்க முலாம் பூசப்பட்ட காசுகளை விற்பனை செய்ததாக கூறினார்.
மேற்படி தங்க முலாம் பூசி நகையை விற்பனை செய்த இருவரையும் பெரம்பலூர் நகர காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் மற்றும் அவரது குழுவினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.