சென்னை: டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS காவல் துறை இயக்குனர், தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள், 2019 ஆம் ஆண்டிற்கான ஸ்காட்ச் விருதை இன்று டெல்லியில் பெற்றுள்ளார்.
டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்கள் காவல்துறையில் இணைந்தது முதல் தான் பணியாற்றிய, அனைத்து துறைகளிலும், தன் முத்திரையை இட்டுச் செல்பவர். சிறந்த பண்பாளர், அனைவரிடமும் எளிமையாக பழகும் தன்மையுடையவர். காவலர் ஆக வேண்டும், என்று கனவு நிறைவேறாமல் திக்கற்ற அலையும் இளைஞர்களை ஊக்குவித்து, அவர்களை காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற வைத்து அழகு பார்த்தவர். இவரின் இச்செயலால், இளம் வயதில் சமூக விரோதிகளாக தடம் மாறாமல், நல்வழியில் வாழ்ந்து வருபவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.
டாக்டர். பிரதீப் வி பிலிப், IPS அவர்கள் இன்று புதுடெல்லியில் அரையிறுதி மாநாட்டில் காவல்துறை நண்பர்கள்(FOP) மற்றும் குற்றவாளியை தெரிந்து கொள்ளுங்கள்(KYC) என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் தகுதி சான்றிதழ் பெற்றுக் கொண்டார். மேலும் அன்றைய தினம் நடைபெற்ற ஸ்காட்ச் விருது 2019 அதற்கான போட்டியில், நாடு முழுவதும் உள்ள அனைத்து துறை நிர்வாகம் சார்ந்த 150 நியமனங்களில் இருந்து, காவல்துறை நண்பர்கள் இயக்கம் என்ற திட்டம் நடுவர்களும், முக்கிய பிரமுகர்களின் வாக்களிப்பாலும், தேர்வாகி தங்க பிரிவு விருதை பெற்றது.
விருதை பெற்றுகொண்ட டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS காவல் துறை இயக்குனர் அவர்கள் தனது செய்திகுறிப்பில், இதற்கு தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக தலைமை செயலாளர் அவர்களுக்கும், தமிழக காவல் துறை இயக்குனர் அவர்களுக்கும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் அவர்களுக்கும், ஆணையர் உணவு வழங்கல் மற்றும் நுகர் பொருள் பாதுகாப்புத்துறை அவர்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இதனை தமிழகம் முழுவதும் உள்ள, காவல்துறை நண்பர்கள் இயக்கத்தின்(FOP) உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், குற்றவாளியை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தனிப்படைபிரிவில் பணியாற்றும் காவல்துறையினரும் தங்கள் மகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
சாதனை நாயகன், டாக்டர். பிரதீப் வி பிலிப், அவர்களின் இந்த விருது தமிழக காவல்துறையை உலகறிய செய்துள்ளது. திக்கற்ற பல்லாயிரம் இளைஞர்களின் வாழ்வை ஏற்றம் அடைய செய்த டாக்டர். பிரதீப் வி பிலிப் அவர்கள் பெயர் காவல்துறை சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.