சென்னை : சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் போக்குவரத்து காவல், பெண் தலைமைக் காவலர் திருமதி.பிரமிளா, நெதர்லாந்தில் நடைபெறும் உலக காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விளையாட்டு – 2022 போட்டியில், 100 மீ, 400மீ ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்க பதக்கங்களும், 200மீ ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். சுமார் 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 63 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.