திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (45), இவர், அந்த பகுதியில் நின்றிருந்த போது, குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதில் காயம் அடைந்த அருள்தாஸ் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகரகாவல் உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன், வழக்குப்பதிவு செய்து, வாலிபரை ர் செய்தார்.
                                











			
		    



