சேலம்: கொரோனா ஊரடங்கால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடியது இதனால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது,
இந்நிலையில் சேலம் மாவட்டம் கல்வராயன் மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் ஆத்தூர் மதுவிலக்கு போலீசார் மூன்று நாட்களாக கீழ்நாடு, மேல்நாடு, கருமந்துரை, குண்டூர், செம்பூர் ஆகிய பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்து அங்கு கள்ளத்தனமாக காய்ச்சிய 2400 லிட்டர் சாராய ஊரலை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த சாராயபேரலை உடைத்து அழித்தனர் மேலும் இங்கு கள்ளத்தனமாக காய்ச்சி தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.