திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்., IPS., அவர்கள் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் இன்று தாழையூத்து பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் ஆட்கள் அதிகம் நடமாடும் இடத்தை கண்காணித்து, தேவை இன்றி வெளியே சுற்றுபவர்களுக்கு தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு.பத்மநாபன், அவர்கள் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே யாரும் சுற்ற வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பினார்.