இராமநாதபுரம் : மிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் என்பவர் தாமாக முன்வந்து, டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், தனக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுவதாகவும் தன்னை தனிமை படுத்தக் கோரி காவல்துறையினரிடம் கூறியதை தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மற்ற நபர்களும் தன்னை தனிமை படுத்தி கொள்ள முன்வர வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள மற்ற நபர்களுக்கு இருமல், காய்ச்சல், சளி, தும்மல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமாக முன்வந்து அரசு மருத்துவமனையில் சேர்ந்து தனிமை படுத்தி கொள்ள இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்