கடலூர் : கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசு 144 ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ள நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் டெல்லி பதிவு எண் கொண்ட கார் கடக்க முயன்றபோது
தட்டாஞ்சாவடி பகுதியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.நாகராசன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கர் காரை மடக்கி காரில் இருந்த ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கடலூர் மாவட்டம் O.T பகுதியில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி டெல்லிக்கு சுற்றுலா சென்றதாகவும்
தற்போது டெல்லியில் இருந்து கார் மூலம் O.T பகுதிக்கு திரும்பி வந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
உடனடியாக டெல்லியில் இருந்து வந்த ஆறு பேரை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்வதற்காக காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது.
இது தொடர்ந்து 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டெல்லியில் இருந்து கடலூர் மாவட்டம் வரை காரில் எப்படி பயணித்தார்கள் என்றும் தமிழகத்திலிருந்து வேறு யாராவது டெல்லிக்கு இவர்களுடன் சுற்றுலா சென்றார்களா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்