தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவனையில் பணியாற்றி வருபவர் கிரகத்துரை. இவர் நேற்று முன்தினம் மருத்துவமனை பகுதியில் தனது டூவிலரை நிறுத்தி விட்டு டூவிலரில் சாவியை வைத்து சென்றுள்ளார்.
பணி முடிந்து திரும்பி வந்து பார்க்கும் போது டூவிலர் காணமால் போய் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாகலாபுரம் அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தினை சேர்ந்த முனியசாமி என்ற சின்னா என்பவர் டூவிலரை திருடி சென்றது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் முனியசாமியை கைது செய்து, அவரிடமிருந்து டூவிலரை பறிமுதல் செய்தனர்.