சென்னை : சென்னை, மெரினா கடற்கரையில், அலையில் மூழ்கி மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் முகேஷ்-க்கு முதலுதவி செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ. சைலேந்திரபாபு IPS., அவர்கள், (16.08.2022), அன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பூரண குணம் அடைந்த சிறுவன் முகேஷ் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இன்று தனது குடும்பத்தினருடன் டிஜிபி அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். நாளை முதல் பள்ளிக்கு செல்ல உள்ளதாக முகேஷ் கூறியதை கேட்டு டிஜிபி அவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
