திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள் தஞ்சாவூர் திருச்சி உட்பட பல மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் . திண்டுக்கல் காந்தி மார்க்கெட் நேருஜி மேல்நிலைப் பள்ளி எதிரே செயல்பட்டு வந்தது .
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாலும், மக்கள் கூடுவதில் நெருக்கடி ஏற்படுவதாலும் காந்தி மார்க்கெட் பழநிரோடு அருகே மாற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதற்கு காய்கறி வியாபாரிகளும். பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மார்க்கெட் அருகே தனியார் மருத்துவமனை இருப்பதாலும்,அங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆகவே மார்க்கெட்டை அந்த இடத்துக்கு மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மார்க்கெட்டுக்கு இடம் ஒதுக்கி விட்டதால் அங்கு வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த மார்க்கெட் செயல்படும் விதத்தையும், அங்கு வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கும் நிலை குறித்து டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா