திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட், தாராபுரம்ரோடு, ரவுண்டானா, செக்போஸ்ட், நான்கு வழிச்சாலை,ஆகிய பகுதிகளில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறுகிற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இ-பாஸ் அனுமதி பயணச்சீட்டு இல்லாமல் செல்லக்கூடிய வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகின்றனர்.
காவல்துறையினரால் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் பகுதிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட திண்டுக்கல் சரக டிஐஜி.முத்துசாமி கூறியதாவது: காய்கறிகள் அனைத்து மக்களுக்கும் சென்று அடைவதற்கான வழி வகை ஏற்பாடு செய்யச் சொல்லி காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளோம், என்றார். மேலும் பழனி பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள புறப்பட்டு சென்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா