திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் நபர்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும் கேமராக்கள் மூலம் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி பூ மார்க்கெட் ,வாணி விலாஸ் மேடு ஆகிய பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அந்த பகுதியில் போலீசார் விரைந்து செல்ல உத்தரவிட்டார். உடனே அங்கு சென்ற போலீசார் அங்கு அமர்ந்திருந்த இளைஞர்கள், லோடுமேன்களை வெளியேற்றினர். மேலும் கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி ஆகிய பகுதியில் கடைகள் எதுவும் திறந்து உள்ளதா என்பதை கேமரா மூலம் ஆய்வு செய்தார். இதுகுறித்தூ டி.ஐ.ஜி .முத்துசாமி கூறியதாவது;பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்கவேண்டும். தொற்று அதிகமாக இருக்கிறது. போலீசார் கடமையை கடுமையாக்க காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணிந்து ,சமூக இடைவெளியை விட்டு அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். தேவையில்லாமல் நகர்ப்பகுதிகளில் வரவேண்டாம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா