கோவை: கோவைநகரிலுள்ள கணபதி, வீதியை சேர்ந்தவர் ஜெயபால் 44. டிரைவராக பணியாற்றினார்.கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கணபதி, , தண்ணீர் லாரியை ஓட்டி வந்தார்.அதிவேகமாக லாரியை ஓட்டியதால், கண்ணப்பன் நகர் பஸ் ஸ்டாபில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது லாரி மோதி, அருகிலிருந்த ஸ்டூடியோவிற்குள் புகுந்தது.
இதில், விஜயா 37, ஒன்றரை வயது குழந்தை காயத்ரி, பொன்னுச்சாமி, 38, சுடலை முத்து ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மத்திய பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, டிரைவர் ஜெயபால், லாரி உரிமையாளர் சசிகுமார் ஆகியோர் மீது, கோவை குண்டுவெடிப்பு வழக்கு தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
11 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி திரு. பாலு, குற்றம் சாட்டப்பட்ட ஜெயபாலுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சசிகுமார் விடுதலை செய்யப்பட்டார்.