திண்டுக்கல்: முழு ஊரடங்கில் தேவையின்றி ரேஸ் பைக்கில் வாலிபர்கள் உலா வருகின்றனர். சுற்றுலா போல காரில் செல்வோரையும் மற்றும் பொதுமக்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், அத்தியாவசிய தேவைகள் தவிர தேவையில்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. வெளியில் சுற்றுபவர்கள் டிரேன் கேமரா மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.