தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் (பொறுப்பு) அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர்
திரு.கீர்த்தி வாசன் அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்தி வாசன் தலைமையிலான காவலர்கள் பட்டீஸ்வரம் காவல் நிலைய சரகம் சேஷம்பாடி பகுதியில் எவ்வித அனுமதியின்றி மண் மற்றும் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்று ஒரு ஜேசிபி எந்திரம் மற்றும் இரண்டு டிராக்டர் டிப்பர்களை மணலுடன் பறிமுதல் செய்தனர். இந்த மணல் அள்ளியது தொடர்பாக சேஷம்பாடியை சேர்ந்த கோவிந்தராஜ், ரெட்டி பாளையத்தை சேர்ந்த சாமி அய்யா, தேவா, நாச்சியார் கோவில் கூகூரை சேர்ந்த மனோஜ் ஆகியோரிடம் பட்டீஸ்வரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்