சென்னை வடபழனியை சேர்ந்த திரு . P.K அபிஷேக் ரபி என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் அவர் Youtube பயன்படுத்தி வருவதாகவும் M A D A N , TOXIC MADAN 18+ , PUBG Madan Girl fan , Richie Gaming YT போன்ற சேனல்களில் MADAN angry at his girlfriend a | Strictly 18+ | Tamil | PUBGM | என்ற டைட்டில்களில் வீடியோக்களை பார்த்ததாகவும் மேற்படி வீடியோக்களில் Madan பெண்களை மிகவும் ஆபாசமான , அருவருக்கத் தக்க வார்த்தைகளை பயன்படுத்தி மதன் என்பவர் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட PUBG Game ஐ Online ல் விளையாடும் போது அதனை Stream செய்து விடுகிறார்.
என்றும் அவருயை வீடியோக்கள் கேட்பவருக்கு தொல்லை தரும் வகையிலும் எரிச்சல் ஊட்டும் வகையிலும் பெண்களின் கற்பு நெறியை அவமதிக்கும் வகையிலும் பெண்களின் அந்தரங்க விஷயத்தை குறிப்பிடும் வகையிலும் உள்ளதாகவும் மேற்படி சேனலில் பெரும்பாலும் சிறுவயதினர் அதிகம் பார்ப்பவர்களாக உள்ளனர் என்றும் இவருடைய பெண்களை மிகவும் ஆபாசமான அருவருக்கத் தக்க வகையிலான பேச்சு Youtube Online ல் தினமும் வெளியாகிறது என்றும் மேற்படி சேனல்களில் தரக்குறைவான , ஆபாசமான , பெண்களின் அந்தரங்கங்களை பற்றி பலரும் பார்க்கும் Online Chennal ல் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருவதாகவும்.
மேற்படி வீடியோக்களை பார்ப்பவர்கள் மனதில் பாலியல் வக்கிர நோக்கம் தோன்றும் வகையிலும் , பாலுணர்வை தூண்டும் வகையிலும் அவருடைய பேச்சு உள்ளதாகவும் மேற்படி வீடியோவை சிறுவயதினர் முதல் பலரும் Subscribers- ஆக உள்ளதாகவும் எனவே மேற்படி அவரது சேனல்களை தடை செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார் . இது சம்மந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு , சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
புலன் விசாரணையில் மேற்படி சேலத்தை பூர்வீகமாக கொண்ட தற்சமயம் வேங்கைவாசலில் வசித்து வரும் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மதன் என்ற மதன்குமார் மற்றும் அவருடைய மனைவி கிருத்திகா ஆகியோர் சேர்ந்து மேற்படி அரசால் தடைசெய்யப்பட்ட PUBG கேம் ஆன்லைனில் விளையாடி வருவதும் அதற்காக யூடியூப் சேனல்கள் துவங்கி அதில் 8 லட்சம் பேர்களை subscribers ஆக சேர்த்து பணம் பெற்றுக்கொண்டு விளையாடி வருவதும் மேற்படி வீடியோக்களில் பெண்களின் அந்தரங்கம் குறித்து ஆபாசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி பதிவேற்றம் செய்து வருகிறார்கள் என்றும் தெரியவந்தது .
எனவே மேற்படி தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்த நிலையில் , மதன்குமார் மனைவி கிருத்திகாவை விசாரணை செய்ததில் அவர் தனது கணவர் தலைமறைவு எதிரி மதன் என்ற மதன்குமார் என்பவருடன் சேர்ந்து மேற்படி யூடியுப் சேனல்களை ஆரம்பித்து அட்மினாக இருப்பதாகவும் நிறைய subscribers சேர்த்து குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் ஆடம்பரமாக வாழவேண்டும் என்று ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெறுவதற்காக வங்கி கணக்குகளை துவக்கி பணம் பெற்று வருவதும் தெரியவந்தது .
15.06.2021 அன்று அவரை சேலத்தில் கைது செய்து சென்னை கொண்டு வந்து அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் வேங்கைவாசலில் உள்ள அவரது வீட்டிலிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன் , டேப்லட் , கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டது . தலைமறைவு எதிரி மதன் என்ற மதன்குமாரை தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர் .
பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டாம் என்றும் அதற்காக பணம் கட்டி ஏமாற வேண்டாம் என்றும் ஆபாச பேச்சுக்களை பேசும் இணையதள கேம்களில் subscribers ஆக சேர வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் , இ.கா.ப அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்