கர்நாடகம்: கர்நாடக மாநில காவல்துறை இயக்குநர் திரு. தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்த போது கை தவறி, விசையை அழுத்தியதால் திடீரென வெளியேறிய குண்டு அவரின் மார்பில் பாய்ந்தது. உடனடியாக அவரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கர்நாடக மாநில வீட்டு வசதி வாரிய டிஜிபி-யாக இருப்பவர் ஆர்.பி.சர்மா (வயது 59). அம்மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான இவர், இதன்னுடைய கைத்துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது, அப்போது தவறுதலாக துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் அதிலிருந்து வெளியேறிய குண்டு, இஅவரின் மார்பில் பாய்ந்தது.
வரும் டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். குண்டு பாய்ந்து காயமடைந்த அவர், ஆபத்தான கட்டத்தில் இல்லை என கூறப்படுகிறது. தான் தவறுதலாக சுட்டுக்கொண்டதாக பெங்களூரு காவல் ஆணையர் திரு.கமல் பண்டிடம், டிஜிபி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.