சென்னை: பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும், ” போலீசார் மீது புகார் அளிக்க, பெண் டி.ஜி.பி., தலைமையில், புதிதாக பணி வழிகாட்டும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., முதல் கான்ஸ்டபிள் வரை, 23,502 பெண் போலீசார் மற்றும் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பணியிடங்களில், பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். மன உளைச்சல் பெண் அதிகாரிகளும், தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் போலீசாரை, வீட்டு வேலை உள்ளிட்ட வேறு பணிகளுக்கு அமர்த்தி, ‘டார்ச்சர்’ செய்வதாகவும் கூறப்படுகிறது. பெண் போலீசார், குடும்ப பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. காதல் வலையில் வீழ்த்தப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். மிகுந்த மன உளைச்சலில் சிலர் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துள்ளனர். பெண் போலீசார், பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து, வெளிப்படையாக புகார் அளிப்பது இல்லை. அப்படியே புகார் அளித்தாலும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இதனால், பெண் போலீசார் புகார் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்காக, சென்னை எழும்பூரில் உள்ள, சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் அலுவலகத்தில், அதன் டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையில், பணி வழிகாட்டும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.’பெண் போலீசார், அதற்காக, சென்னை எழும்பூரில் உள்ள, சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் அலுவலகத்தில், அதன் டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையில், பணி வழிகாட்டும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. ‘பெண் போலீசார், பாலியல் ரீதியான தொல்லையில் இருந்து விடுபட, பணியை மேலும் செம்மைப்படுத்த, உளவியல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபட, குடும்பம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ள, இந்த குழுவை அணுகலாம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.