இராணிப்பேட்டை: காவலர் தினம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று அரக்கோணம், சோளிங்கர் பகுதி மக்களுக்கு சுமார் 2000 பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காவல்துறை நண்பர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
அன்னதான விழாவிற்கு அரக்கோணம் காவல்துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் ஆசியுடன், சோளிங்கர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் 20 உதவி ஆய்வாளர்கள் உட்பட, 150 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் உட்பட அங்கிருந்த காவலர்களும் அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் (ஒளிபரப்பு ஊடக பிரிவு) திரு.S.பாபு ஏற்பாடு செய்து இருந்தார். காவலர் தினம் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 24 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாள் பணியில் உள்ள காவலர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், அவர்கள் பணியை பாராட்டியும், இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகின்றது.
அக்டோபர் 21 ஆம் தேதி, பணியில் உயிர் நீத்த, காவலர்களின் நினைவாக, மலரஞ்சலி செலுத்தி அனுசரிக்கப்படுகின்றது. இந்நாளை கொண்டாட முடியாது.
காவலர்களின் நற்செயல்களை கொண்டாட டிசம்பர் 24 ஆம் தேதி காவலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் காவல் நிலையம் சென்றோ அல்லது பொது இடங்களில் பணியில் உள்ள காவலர்களிடம் சென்று இனிப்பு (சாக்லெட்) வழங்கியோ அல்லது பூங்கொத்து கொடுத்தோ ‘இனிய காவலர்கள் தின நல்வாழ்த்துக்கள்’ என்று கூறி, வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும்.