தூத்துக்குடி: தூத்துக்குடியில் பணிமனையில் நின்று கொண்டிருந்த காவல் துறை வாகனத்தின்முன்பாக நின்றவாறு மூன்று இளைஞர்கள் டிக் டாக் வீடியோ பதிவிட்டனர். இது குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இவர்கள் முனியசாமிபுரம் மற்றும் லெவஞ்சிபுரத்தை சேர்ந்த ஷேக்குவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
3 பேரையும் பிடித்து தென்பாகம் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் மற்றும் எஸ்.பி. ராஜாமணி இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள், காவல் துறையின் பணி எவ்வளவு சிரமமானது என இவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்க்காக, இந்த மூன்று பேரையும் பெரிய மார்க்கெட் சிக்னலில் எட்டுமணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணிசெய்ய வைத்து, காவல்துறையை பெருமை படுத்தினார். இவர்களுக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் சிவகுமார் பயிற்சி அளித்தனர்.
காவல்துறையினரின் இத்தகைய நூதன தண்டனை, அவர்களுக்கு அவர்களுடைய தவறை உணர செய்து, திருந்தி வாழ வழி வகை செய்துள்ளது என்று பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி