திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ் நிலையம் ,கடைவீதி, கிராமப்பகுதிகளில் டி.ஐ.ஜி திரு.முத்துசாமி, IPS ஆய்வு செய்தார். பின்பு அங்கிருந்த கடைக்காரர்கள் காலை10 மணிக்கு கடையை அடைக்க வேண்டும் என வலியுறுத்தினார் .பின்பு போலீசாரிடம் நத்தம் பகுதியில் கொரோனா பரவல் குறித்து கேட்டறிந்தார். நத்தம் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு பிரட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு நடத்தினார். ஊரடங்கு குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டுமென வலியுறுத்தினார். இதில் முகக்கவசம், சமூக இடைவெளி, வீட்டிலேயே இருக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா