திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்கா, கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சரவணன், வயது 43 என்பவர், காஞ்சி காமராஜ் நகர், டாஸ்மாக் கடை எண்:9337 கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருவதாகவும், கடந்த 24.11.2021-ந் தேதி தானும், தன்னுடன் பணிபுரியும் முருகன் என்பவரும் டாஸ்மாக் கடையில் விற்பனை முடித்துவிட்டு கணக்கு பார்த்து விட்டு இரவு 9 மணியளவில் வெளியே வரும்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், அதை தடுக்க முற்பட்டபோது கத்தியால் வெட்டியதில் தனக்கு கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டதாகவும் டாஸ்மாக் கடையின் மேஜை டிராயரில் வைத்திருந்த 10,000 ரூபாய் பணத்தை பறித்து சென்றுவிட்டதாகவும் கொடுத்த புகாரின் பேரில் கடலாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.அறிவழகன் அவர்களின் தலைமையில், கடலாடி காவல் ஆய்வாளர் திரு.முரளிதரன், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.சத்யாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு C.C.TV காட்சிகள் உதவியுடனும், சைபர் கிரைம் காவல் நிலையத்தின் உதவியுடனும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, ஆலத்தூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணாமலை மகன் மணிகண்டன், வயது 24 என்பவரும், தூத்துக்குடி மாவட்டம், சேரன்குளம், சுந்தரம் மகன் இசக்கி பாண்டியன், வயது 23 ஆகிய இருவரும் மேற்படி டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்தவர்கள் என தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதில் இசக்கி பாண்டியன் டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் கோவை மாநகரம், சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.
மேலும் போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கேட்டவரம்பாளையம் அருணகிரிமங்கலம் ரோடில் வாகத்தனிக்கை செய்த போது
Yamaha R15 இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து வழிப்பறி செய்த 19000/- ரூபாய் பணம், Yamaha R15 இருசக்கர வாகனம் மற்றும் பட்டாகத்தி பறிமுதல் செய்தனர்