காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலவாக்கம் டாஸ்மாக் கடையை (கடை எண்.4544) கடந்த 29.02.2024 அன்று இரவு 22.00 மணியளவில் விற்பனையாளர் திரு.தேவராஜ்(42) த/பெ.பச்சையப்பன், பழைய காலனி, ஆதவப்பாக்கம் கிராமம் உத்திரமேரூர் தாலுக்கா என்பவர் விற்பனை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்று பின்பு மறுநாள் 01.03.2024 அன்று மதியம் 12.00 மணியளவில் வந்து பார்த்தபோது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு கடையின் உள்ளே நுழைந்து கடையில் இருந்த IMFL பெட்டி 107 எண்கள் மற்றும் பீர் பெட்டிகள் 4 எண்கள் என மொத்தம் ரூ.8,62,930/- மதிப்புள்ள – மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் திரு.பிரபாகர் அவர்களின் மேற்பார்வையில் சாலவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்று (11.03.2024) இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 1) சுபாஷ் 19.
2) விஷ்வா (எ) விக்னேஷ்வரன் 20. மற்றும் 3) விக்னேஷ் 26. ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து மேற்படி திருடுபோன அனைத்து மதுபாட்டில்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் (Bolero Vehicle – TN 21 BF 8727) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்படி குற்றவாளிகள் மீது பெருநகர், மேல்மருவத்தூர் மற்றும் வந்தவாசி வடக்கு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவ்வழக்கில் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான மோகன் மற்றும் கார்த்திக் ஆகியோர் தலைமுறைகளாக உள்ளனர். இதில் மோகன்குமார் மீது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொலை வழக்கு உள்ளது. இவ்வாழ்க்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
மேலும், இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த வாலாஜாபாத்காவல் நிலைய ஆய்வாளர், சாலவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.சண்முகம் அவர்கள் வெகுவாக பாராட்டினார்