கோவை: கடந்த 10ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் (எண் 15 21) பின் கதவு பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ 90 ஆயிரத்து 740 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்று விட்டனர் .
இதுகுறித்து அந்த கடையின் சூப்பர்வைசர் பாபு (வயது 49) வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி காலனியை சேர்ந்த சதீஷ் என்ற சதீஷ் குமார் (வயது22)
வெள்ளலூர் அவுசிங் யூனிட்டை சேர்ந்த தீனா என்ற தென் தீனா ( வயது 22 ) ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர்.S இவர்களிடமிருந்து மது பாட்டில்களும் ,32 ஆயிரத்து 860 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.