கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மாக்கினாம்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 44) இவர் கோவிந்தனூரிலுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று டாஸ்மாக் கடை க்கு சென்றார் .அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளே சென்று பார்த்தபோது கடையில் எதுவும் கொள்ளை போகவில்லை.
இதுகுறித்து செந்தில்குமார் வடக்கி பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது .இவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கொள்ளையர்கள் வடக்கிபாளையம் பகுதியில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது .இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டனர் அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்தனர் .போலீசார் அவர்களைத் துரத்திப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவிந்தனூரில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி ( வயது 26) விவேக் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பைக் பறிமுதல் செய்யப்ட்டது..அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.