தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று (26.10.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு பகுதியில் உள்ள தவிடுதாங்கி கண்மாய் பகுதியில் கயத்தாறு வெள்ளாளன்கோட்டை பகுதியை சேர்ந்த பாலையா மகன் கிருஷ்ணசாமி (38). மற்றும் கயத்தாறு அகிலாண்டபுரம் பகுதியை சேர்ந்த கோமதிபாண்டியன் மகன் முத்துப்பாண்டி (33). மற்றும் சிலர் சேர்ந்து சட்டவிரோதமாக அனுமதியின்றி ஜே.சி.பி இயந்திரம் மூலம் லாரியில் சரள் மணல் திருடியது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான கிருஷ்ணசாமி மற்றும் முத்துப்பாண்டி ஆகிய 2 பேரையும் கைது செய்து, திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி, ஜேசிபி இயந்திரம் மற்றும் 3 யூனிட் சரள் மணலையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.