சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சிக்குட்பட்ட கிழக்கு மாரியம்மன் கோவில் தெரு கள்ளிக்காடு பகுதியில் வசிக்கும் கோவிந்தன் மனைவி அகிலாண்டம் இவர் தனது வீட்டின் அருகில் நேற்று மதியம் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஹெல்மெட் மற்றும் மங்கி குல்லா அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த ஒரு மர்ம நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த சுமார் ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்றார்.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய இளைஞனிடம் ஓமலூர் போலீசார் விசாரணையில் ராசிபுரம் குருசாமிபாளையம் கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்த சதாசிவம் மகன் ஜெயகர் என்பதும் (26) வயதுள்ள இளைஞரான அவர் ரம்மி விளையாடுவதற்காக கடன் வாங்கி விளையாடியதாழ் கடன் தொல்லை தாங்காமல் பணத்தை கடன் கட்டுவதற்கு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணை தெரிவித்தது. இதையடுத்து இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

S. ஹரிகரன்