திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், பெருகமணி ஊராட்சி எட்டாவது வார்டு மாரியம்மன் கோயில் தெருவில், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, ஜீயபுரம் உட்கோட்ட காவல்துறை மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட், மக்கள் பாதுகாப்பு மையம் , குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு இணைந்து சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா அவர்கள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலை தொடங்கி வைத்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் மற்றும் காவலன் செயலி, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள், பாதுகாப்பு குறித்து பேசினார் . மக்கள் பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் ராணி மேரி வாழ்த்துரை வழங்கினார் .மக்கள் பாதுகாப்பு மைய பொறுப்பாளரும் ,வார்டு உறுப்பினர் செந்தில்குமார் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி