சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பயங்கரம். ஜாமீனில் வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை காரைக்குடியில் பட்டப்பகலில் வினீத் என்ற இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வினீத் என்ற, கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். ஜாமீன் நிபந்தனையின்படி, அவர் தனது நண்பர்களுடன் காரைக்குடி காவல் நிலையத்திற்கு கையெழுத்திடுவதற்காக வந்துள்ளார். காரைக்குடி பேருந்து நிலையத்திற்கு வந்தபோது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த வினீத் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்கள் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கொலை செய்யப்பட்ட வினீத் கூலிப்படையைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த மார்ச் மாதம் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வினீத்துடன் வந்த நண்பர்கள 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ராபர்ட் கென்னடி