மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான குற்ற வழக்குககள் தாக்கலாகும் பட்சத்தில் அவற்றை விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் முறையாக நீதிமன்றக் கோப்புக்கு எடுக்கப்பட்டு துரிதமாக சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்கள்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் சமயநல்லுார் உட்கோட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் வருடம் தாக்கலான உசிலம்பட்டி, K.புல்லுாத்துப்பட்டி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் சீனி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி வெங்கடேசன், (28), த/பெ ராஜாராம், சுப்பிரமணியபுரம், நாகமலை புதுக்கோட்டை, மதுரை மாவட்டம் என்பவருக்கு எதிராக SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட (PCR court) சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட (PCR) சிறப்பு நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூபாய் 1,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றி நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.பாலசுந்தரம் மற்றும் நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.முத்துப்பிரியா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
திரு.விஜயராஜ்