மதுரை: அண்ணா நகர் மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடி பஞ்சமி மற்றும் ஆடி பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இத்திருக்கோவிலே, ஆடி பஞ்சமி மற்றும் ஆடிப்பூர வாய் முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில் சண்டி ஹோமமும், அதைத் தொடர்ந்து, வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கும், மகாலட்சுமி, மீனாட்சி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரமாகி வளையல் காப்பு உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் காப்பு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று, ஆடிப்பூரம் மற்றும் பஞ்சமி முன்னிட்டு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது.
இதை அடுத்து, பலவித சாதங்கள் அம்மனுக்கு நெய்வேதியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு கோயில் சார்பாக வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் . இதே போல, மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்திலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்திலும், ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும், ஆவின் செல்வ விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வரர் ஆலயத்திலும் ,மதுரை அண்ணா நகர் யானை குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் காப்பு உற்சவம் நடைபெற்றது. இதை அடுத்து, பக்தர்களுக்கு, பிரசாதமாக வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி