பாலத்தில் மது அருந்திவிட்டு குடிபோதையில் தவறி கீழே விழுந்து வாலிபர் சாவு
சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் தண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) ராஜா இவர் சோழவரம் அடுத்த ஆங்காடு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தது வருவதாகவும் நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது காரனோடை பாலத்தின் மேல் மது அருந்திவிட்டு உட்கார்ந்திருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார் தகவலின் பேரில் சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டு சாவு
சோழவரம் அடுத்த பழைய அலமாதி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(55) இவரது மனைவி சாந்தி என்பவர் கடந்த மாதம் 4ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரன் நேற்று முன்தினம் ஒரு மாதகாலம் ஆவதால் அதே தேதியில் வீட்டின் அருகிலுள்ள கொய்யா மரத்தில் மனைவியின் சேலையில் தூக்கிலிட்டு இறந்துவிட்டார். இதுகுறித்து சோழவரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சோழவரம் அருகே கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது
சோழவரம் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரனோடை மாந்தோப்பு அருகில் புதரில் 5 பேர் மறைந்து கொண்டிருப்பது தெரியவந்தது அருகில் சென்று பார்த்தபோது விற்பனை செய்ய சிறுசிறு பொட்டலங்களாக போட்டுக்கொண்டிருந்த வர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா என்பது தெரியவந்தது பின்னர் அவர்களிடமிருந்து 1கிலோ 750 கிராம் கஞ்சாவை கைப்பற்றி ஐந்து பேரை கைது செய்து சோழவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்