சென்னை: சோழவரம் காவல் உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரனோடை மாந்தோப்பு அருகில் புதரில் 5 பேர் மறைந்து கொண்டிருப்பது தெரியவந்தது அருகில் சென்று பார்த்தபோது.
விற்பனை செய்ய சிறுசிறு பொட்டலங்களாக போட்டுக்கொண்டிருந்த வர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்து 1கிலோ 750 கிராம் கஞ்சாவை கைப்பற்றி ஐந்து பேரை கைது செய்து சோழவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்