மதுரை : சோழவந்தான் சோழவந்தான் போலீஸ் சார்பாக இப்பகுதியில் கொரோணா நோய் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் ஆலோசனையின் பேரில்சோழவந்தான் காவல் நிலையத்தில் வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா தலைமை தாங்கினார்.சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் வரவேற்றார். இம்முகாமில் அனைத்து வியாபாரிகள் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன்,ஜவகர்லால், சரவணகுமார்,ஹோட்டல் மற்றும் காபி டீக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகி பிடிஆர் பாண்டி, அடகு கடை மற்றும் பைனான்சியர் சங்க நிர்வாகிகள் ராஜா இருளப்பன்,மருந்து கடை சங்க நிர்வாகிகள் ஈஸ்வரன்,குமார் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் வர்த்தக நிறுவனத்தில் உள்ளவர்களும், கடைக்கு வருபவர்களும் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும்,கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் கைகழுவுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்,சமூகஇடைவெளியுடன் நிற்பதற்கு ஏற்பாடு செய்திருக்கவேண்டும் உட்பட கொரனோ நோய் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது.காவல்நிலையம் முன்பாக போலீசார் மற்றும் வர்த்தக நிர்வாகிகள் கொரனோ நோய் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.தலைமை காவலர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி