மதுரை : குண்டர் தடுப்பு சட்டம் 1982-ல் அரசு கொண்டு வந்தது. இப்பொழுது நடைமுறையில் இச்சட்டத்தில் தொழில்முறை திருடர்கள், ரவுடிகள், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள், சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி, ஆடியோ மற்றும் வீடியோ வெளியிட்டு ஜாதி, மத மோதல்களை தூண்டுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து பிணை ஏதுமின்றி ஓராண்டு தடுப்பு காவலில் வைப்பது தான் குண்டர் தடுப்பு சட்டம்.
மதுரை மாவட்டம் காடுபட்டி காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய, 1.முனீஸ்(எ)முனீஸ்வரன் (24),
2.மருது(எ)மருதுபாண்டி (23), 3.அஜித் (எ) அஜித்குமார் (எ)கோழி அஜித் (20), 4.பாரதி (எ) சந்தானபாரதி (எ) செட்டு (19) என்பவர்களை சோழவந்தான் காவல் ஆய்வாளர் திருமதி. வசந்தி அவர்களின் அறிக்கையின்படி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார், IPS அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அன்பழகன் IAS அவர்கள், குண்டர் (GOONDAS ACT) தடுப்பு காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

திரு.ஜஸ்டின் சரவணன்