தஞ்சாவூர் : வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக நாளை முதல் 10-5-2021* 24-5-2021 டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கிடையாது என்கின்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .தேஷ்முக்சேகர் சஞ்சய் – ஐபிஎஸ் அவர்கள்
மாவட்ட பகுதிகளில் போதை பொருள்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்களை இனம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற உத்திரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து நேற்று (8-5-2021) வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்
கும்பகோணம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையிலான தனிப்படை போலிஸார் சோழபுரம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில், அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த சிலம்பரசன்(1) மற்றும் வேலவன்(2) ஆகியோரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த 350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்