திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான இரண்டு சோலார் மின்விளக்கு பேட்டரிகளை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றதாக கூடங்குளம் ஊராட்சி அலுவலர் திருமதி சுதா(45) அவர்கள் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், கூடங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு பார்த்திபன் அவர்கள் விசாரணை செய்ததில், சோலார் பேட்டரிகளை திருடியது கூடங்குளம் புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வன்(25) மற்றும் பெரிய தோட்ட தெரு பகுதியைச் சேர்ந்த முருகேசன்(48)என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்