திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தகரகுப்பம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தூர் மாநில சோதனை சாவடியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வெளி மாநில மது, கள்ளச்சாராயம், இயற்கை கனிமங்கள் கடத்தலை தடுக்க அனைத்து வாகனங்களையும் தணிக்கை செய்யவும் 24X7 CCTV- கேமராக்களை கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்து மேலும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றியும் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.