அரியலூர் : அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் ஒன்றாக அமைந்துள்ள செந்துறை ரவுண்டானா பகுதியில் காவல் துறை சார்பாக தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. இந்நிலையில் காவலர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.காவலர்களின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சோதனைச் சாவடியை புதுப்பித்து 09/07/2020 அன்று சோதனைச் சாவடியை திறந்து வைத்தார்கள். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் மற்றும் திரு.திருமேனி அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி 09/07/2020 அன்று காவல்துறையினர் அவர்களின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் குழந்தை திருமணம்,குழந்தைளுக்கு எதிரான குற்றங்கள்,திருட்டு, தலைகவசம் அணிவது, மற்றும் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் (VVC) ஆகியவைகள் சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நமது விழிப்புணர்வு ஒன்றுதான் இந்த நோய் மேலும் பரவாமல் முற்றிலும் ஒழிக்க வல்லது.