குமரி: கன்னியாகுமரியில் ஏராளமான ஆதரவற்ற மக்கள் சாலையோரத்தில் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் நாடோடியாக வாழ்க்கையை நடத்தும் அவர்கள் சுற்றுலாப் பயணிகள் கொடுக்கின்ற பணத்தில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
தற்போது முழு ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் யாரும் வருவதில்லை. இதனால் இந்த நடைபாதை மக்களுக்கு வருவாய் எதுவுமின்றி உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.
இதனால் இவர்கள் இங்குள்ள மீன் சந்தைக்கு சென்று அங்கு உள்ள கழிவு மீன்களை வாங்கி வந்து அவற்றைக் உலர வைத்து சுட்டு சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றனர்
இப்பகுதியில் பாதுகாப்புக்காக சென்ற கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரனை சந்தித்து இந்த மக்கள் தங்களின் பரிதாப நிலையை சொல்லி உதவி கோரினர்.இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்ட கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் இன்று வெள்ளிக்கிழமை மதியம் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சுமார் 50 பேர்களுக்கு பிரத்தியோகமாக சமைத்து எடுத்து வரப்பட்ட பிரியாணியை அவர் வழங்கினார்.மிகுந்த சந்தோசத்துடன் அந்த உணவை அவர்கள் வாங்கி சாலையிலேயே அமர்ந்து உண்டனர்.
இது குறித்து கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரன் கூறியதாவது ;இதுபோன்று சாலையோரம் ஆதரவற்று தவிக்கும் மக்களுக்கு பொதுமக்கள் கருணையுடன் தங்களால் இயன்ற உணவு அல்லது உதவியை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.