தூத்துக்குடி : தென்மாவட்டங்களில் அனைத்து சமூக மக்களிடமும் நன்மதிப்பை பெற்ற காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா அவர்கள் குற்றம் செய்தது யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் சமம், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை நிறுபித்துவிட்டார்.
10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த தனது சொந்த சித்தப்பாவைவே கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய உதவிஆய்வாளர் இசக்கிராஜாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்..
கடந்த 2010ம் ஆண்டு சாத்தான்குளம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்த வழக்கில் மணியாச்சி பாறைக்குட்டத்தைச் சேர்ந்த தங்கபாண்டித்தேவர் மகன் முருகன் என்ற இசக்கிதுரை (வயது 45) கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார், அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக தேடிவந்த நிலையில் இன்று (29.07.2020) வரை தலைமறைவாக இருந்து வந்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இசக்கிராஜா அவர்கள் தலைமையில், காவலர்கள் SSI திரு. பிரெடரிக் ராஜன், காசி, மணிகண்டன் மற்றும் ரகு ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று காலை விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டியில் முருகன் என்ற இசக்கிதுரை (45) கைது செய்தனர்.
10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்தமையைக்கு காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.