சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலை வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தப்பட்டு ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லிட்டர் ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது,
இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், அப்போது கொத்தாம்பாடி என்னும் இடத்தில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் 300லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது,
இதனையடுத்து கார் ஓட்டுனர் சரவணனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அலவாய்ப்பட்டியை சேர்ந்த பூபதி நடேசன் என்பவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென இ-பாஸ் பெற்று சேலம் மாவட்ட ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் பகுதியில் இருந்து 300லிட்டர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி காரில் ஏற்றிக்கொண்டு ஓட்டுனரை காரை எடுத்து வரச்சொல்லி விட்டு காரின் உரிமையாளர் இருசக்கர வாகனத்தில் போலீசார் வழியில் இருக்கிறார்களா என வேவு பார்த்து கொண்டு முன்னே சென்று கொண்டு போனில் வரச்சொல்லியுள்ளார்
அப்போது கொத்தாம்பாடியில் போலீசாரிடம் சிக்கியதாக தெரிவித்துள்ளார், இதனையடுத்து கார் ஓட்டுனர் சரவணனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 300 லிட்டர் சாராயம் மற்றும் 15 இலட்சரூபாய் மதிப்பிலான சொகுசு காரை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் கார் உரிமையாளரை தேடி வருகின்றனர்,