மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் நம்பமுடியாத சலுகைகள்¸ கவர்ச்சியான தள்ளுபடிகள் மற்றும் பரபரப்பான பண வருவாயைக் கொண்டு மக்களை ஈர்க்கிறார்கள். செலுத்திய பணத்துடன் அதிக பலன்களை திருப்பித் தருவதாக போலியாக உறுதியளித்து¸ வஞ்சக வலைத்தளங்களின் மூலம் முதலீடு செய்ய மக்களை சிக்க வைப்பது போன்றவை இந்த குற்றவாளிகளுக்கு கைவந்த கலையாகும்.
இந்த சைபர் கிரிமினல்கள் அவற்றின் டிஜிட்டல் இருப்பை மட்டுமே கொண்டுள்ளன. மக்களால் முதலீடு செய்யப்பட்டவுடன் அவை விரைவாக மறைந்துவிடும்.
சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள்:
•சைபர் குற்றவாளிகள் கவர்ச்சிகரமான பெயர்களுடன் வலைதள பக்கத்தினை வாங்கி¸ அதிக வட்டி விகிதங்களை உறுதியளிக்கும் வகையில் மக்களை முதலீடு செய்ய வைக்கின்றன.
முதலீடு செய்யப்பட்ட நபர்களுக்கு வலைத்தளத்தை தங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைக்க அதிக வெகுமதிகள் வழங்கப்படுகின்றன.
அவர்களின் இணைய முகப்பில் பதிவுசெய்து பணத்தை முதலீடு செய்தவுடன்¸ அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.
அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட நண்பர்கள் அனைவரும வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டு¸ முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையைப் பெறுவதற்கும் அவர்களின் நண்பர்களைக் குறிப்பிடுவதற்கும் வாட்ஸ்அப் குழுவில் நேர்மறையான தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
சைபர் குற்றவாளிகள் முதலீடு செய்யப்பட்ட பணத்தை பிட்காயினில் முதலீடு செய்வதாக உறுதியளித்து¸ அதிக வட்டி விகிதத்துடன் பணத்தை திருப்பித் தருவதாக கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் உண்மை என நம்பி, ஒரு பெரிய தொகையை அந்த வலைபக்கத்தில் முதலீடு செய்தவுடன் பணத்தைப் பற்றி எந்த தகவலும் இருக்காது மற்றும் அந்த நபர்கள் தொடர்பு கொள்ளவும் முடியாது.
பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள்:
நீங்கள் உண்மையில் ஒரு நபரை நேரடியாக அறியவில்லை மற்றும் அவர்களின் டிஜிட்டல் இருப்பை மட்டுமே அறிந்திருந்தால்¸ அவர்களை உங்கள் நண்பர்களிடம் ஒருபோதும் பரிந்துரைக்க வேண்டாம். இது சமூகத்தில் உங்கள் நம்பகத்தன்மையையும் பாதிக்கும்.
இதுபோன்ற மோசடிகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால், https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.